என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கல்வி தொடர்பு மையத்துக்கு ஆட்கள் தேர்வு
- புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கல்வி தொடர்பு மையத்துக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது
- 21-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)-2 திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு, தகவல் மற்றும் கல்வி தொடர்பு மையம் அமைத்திட பணியிடங்களுக்கு வெளி முகமையின் நடைமுறைகளின் அடிப்படையில் தகுதியானோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடங்கள் 2, திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடம் ஒன்று, கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடம் ஒன்று, தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடங்கள் 2 நிரப்பட உள்ளன.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., , எம்.அண்டு இ. துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.
திரவக்கழிவு மேலாண்மை நிபுணர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் சுற்றுச்சூழல் பொறியியல் அல்லது கட்டிட பொறியியலில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இதற்கு நிகரான பட்டப்படிப்பு பெற்றிருத்தல் வேண்டும். சுற்றுச்சூழல் கட்டுமானம் டபிள்யூ.ஏ.எஸ்.எச்., எம்.அண்டு இ.துறையில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் குறைந்த பட்சம் 1 அல்லது 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம்: ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.கண்காணிப்பு அலுவலர் (திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல்) பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் பி.டெக், எம்.பி.ஏ., எம்.எஸ்.சி. அல்லது இதற்கு நிகரான
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரம் வழங்கப்படும்.தகவல் மற்றும் கல்வி தொடர்பு ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் மாஸ் கம்யூனிகேசன், மாஸ் மீடியாவில் முது நிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறை சமூக ஊடகப் பிரிவில் பணிபுரிந்த அனுபவம். கணினித்திறன் பெற்றிருத்தல் வீடியோ தயாரித்தல், மீம்ஸ் தயாரித்தல், சுவரொட்டி துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்ற அனுபவம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதும் திறன் தொடர்பு கொள்ளும் திறன், விளக்கக் காட்சி திறன், தமிழ் கிராமிய கலாச்சாரம் பற்றிய புரிதல் ஆகியவற்றில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இப்பதவிக்கு மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்களை இணை இயக்குநர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, புதுக்கோட்டை என்ற முகவரிக்கு வருகிற 21-ந்தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்