search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆட்டோ டிரைவரகள் சாலை மறியல் போராட்டம்
    X

    ஆட்டோ டிரைவரகள் சாலை மறியல் போராட்டம்

    • அறந்தாங்கி பேருந்து நிலையம் முன்பு ஆட்டோ சங்கத்தினர் திடீர் மறியல்
    • புதிதாக ஸ்டாண்டு திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது

    அறந்தாங்கி,

    அறந்தாங்கி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 13 இடங்களில் ஆட்டோ ஸ்டாண்டுகள் அமைக்கப்பட்டு சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பேருந்து நிலையத்திற்குள் செல்லும் வழியில் புதிதாக ஆட்டோ ஸ்டாண்ட் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    பேச்சுவார்த்தையை தொடர்ந்து உடன்பாடு எட்டப்படாதததால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுனர்கள் பேருந்து நிலையம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தார். வட்டாட்சியரின் உறுதியளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    மறியல் போராட்டத்தால் பேருந்து நிலையம் முன்பு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி. கௌரவ தலைவர் ராஜேந்திரன், ஆட்டோ சங்க நகர தலைவர் சேகர்,நகர செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் பெரியசாமி, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், சி.ஐ.டி.யு. தலைவர் கர்ணா,

    சி.பி.ஐ. ஒன்றிய துணை செயலாளர் போஸ் கணேசன், ஆட்டோ தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, விநாயகமூர்த்தி, சித்திக் முகமது, ரவி, கணேசன், நாகராஜ், கணேசன், சேகர், சிங்கசெல்வம், கல்யாணராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×