search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாமன்னர் சிலைக்கு மலர் தூவி மரியாதை
    X

    ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாமன்னர் சிலைக்கு மலர் தூவி மரியாதை

    • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மாணவர்கள் மாமன்னர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
    • புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னரான மாமன்னர் ராஜகோபால தொண்டைமான் 1922-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் நாள் புதுக்கோட்டையில் பிறந்தார். அவரது நூற்றியோராவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை மக்களால் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. மாமன்னர் இராஜகோபல தொண்டைமான் ஆட்சிகாலத்தில் புதுக்கோட்டை சமஸ்தான மக்கள் வளமுடன் நலமுடன் வாழ்ந்தனர். இந்திய அளவில் சமஸ்தானத்துக்கென்று தனியாக அம்மன்காசு என்ற நாணயத்தை வெளியிட்ட பெருமை தொண்டைமான் மன்னர்பரம்பரையைச் சேரும்.இந்திய அரசாங்கம் சமஸ்தானங்களை இணைக்கவேண்டும் என்று அறிவித்தவுடன் முதன்முதலில் தமது சமஸ்தானத்தை இந்திய அரசாங்கத்துடன் இணைத்து வரலாற்றில் இடம்பிடித்த மன்னர் ராஜா இரா ஜகோபாலதொண்டைமான் ஆவார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு அவர்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை சமஸ்தான மன்னரின் பெருமைகளை விளக்கி புதுக்கோட்டை நம் புகழ்க்கோட்டை எனும்பாடல் எழுதியதன் மூலம் உலகத்தமிழர்களால் பாராட்டப்பட்ட கவிஞர், பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் தங்கம்மூர்த்தி வழிகாட்டுதலின் படி ஸ்ரீ வெங்கடே ஸ்வராமெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமானின் நூற்றி்யோராவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாமன்னர் ராஜாராஜகோபாலதொண்டைமான் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாணவ மாணவிகள் மன்னர் அரண்மனையை சுற்றிப்பார்த்தனர். நிகழ்வில் பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், மேலாளர்ராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி, ஆசிரியர்கள் துர்காதேவி, சின்னையா, ரவிக்குமார், பாலமுருகன், காசாவயல் கண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×