search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்
    X

    திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

    அைமச்சர் ரகுபதி வடம் பிடித்து தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை.

    புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோயில் மாசிப் பெருவிழா,பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. அன்று துவங்கிய பூச்சொரிதல் விழாவின் ஒருபகுதியாக பக்தர்களால் முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு வழங்கப்பட்ட பூக்கள் அனைத்தும் அம்பாளுக்கு சாத்தப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பூக்களைப் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதன் பிறகு தேர் திருவிழா நடைபெற்றது. சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு, தேரினை வடம்பிடித்து இழுத்தார். இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி , புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா; முருகேசன், புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, வட்டாட்சியர் விஜயலெட்சுமி, அறங்காவலர்கள் குழுத்த லைவர் தவ.பாஞ்சாலன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி, எஸ்.வி.எஸ். ஹீரோ மோட்டார்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார் , தங்கம் கிளினிக் டாக்டர் ராமமூர் த்தி, ஸ்ரீ பார்வதி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் முருகராஜ், 9ஏ நத்தம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஏவிஎம்.பாபு, அண்ணாமலை ஆட்டோ ஏஜென்சி ஐயப்பன், பாஜக மேற்கு மாவட்ட தலைவா; விஜயகுமார், முன்னாள் தொழில்துறை பிரிவு மாநில செலயாளர் சரவணன், கவுன்சிலர்கள் காந்திமதி பிரேம்ஆனந்த், இராசு.க.கவிவேந்தன், ஸ்ரீ புவனேஸ்வரி ஜுவல்லர்ஸ் உரிமையாளர் வெங்கடேசன், விவிஎஸ்பி தங்கமாளிமை உரிமையாளா; சோலைசுப்பிரமணியன், கிங்ஸ் கேட்டரி ங் தாளாளர் சுந்தரவேல், குமரமலை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.வி.செல்வராஜ், நெடுஞ்சாலை மற்றும் பொதுபணித்துறை அரசு முதல் நிலை ஒப்பந்தகாரர் எஸ்.வி. பெருமாள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×