search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்திட வலியுறுத்தல்
    X

    இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்திட வலியுறுத்தல்

    • இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்திட வேண்டும் என்ற புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது
    • புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட தனியார் பள்ளிகள்கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டையில் தனியார் ஹோட்டல் கூட்டரங்கில் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு புதுக்கோட்டை தனியார்பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் ஏ.அசரப் அன்சாரி தலைமை வகித்தார். சென்னை தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த மனோகரன் ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார். பி.எஸ்.கே. கல்வி குழுமங்களின் தலைவர் பி.எஸ்.கருப்பையா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளின் முதல் ஒப்புதல் ஆணை, நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி புதுப்பித்தல் ஆணை, டி.டீ.சி.பி.பெற ஆலோசனை வழங்குவது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட நர்சரி பள்ளிகளுக்கு புதுப்பித்தல்ஆணையினை காலதாமதமின்றி வழங்க வேண்டும், கட்டாய கலவி உரிமைச்சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்ந்துள்ள மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும், டி.டீ.சி.பி. நர்சரி பள்ளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும், மாவட்ட கல்வி அலுவலகத்தில் அவசியம் தபால் பெட்டி வைக்கப்பட வேண்டும், பள்ளிகளின் அலுவல் சார்ந்த கூட்டங்களை தனியார் பள்ளிகளில் நடத்தாமல் முதன்மை கல்வி அலுவலர் தேர்வு கூடத்திலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கௌரத்தலைவர் ஜெய்சிங், செயலாளர் முத்துக்கருப்பன், ஒருங்கிணைப்பாளர் கே.ரமணன், பொருளாளர் மேசியா சந்தோசம், லண்டன் லுக் பள்ளி டாக்டர் கே.கிருஷ்ணமூர்த்தி, மெட்ரிக் ஓசை ஆசிரியர் கே.டீ.கந்தசாமி, ஆர்ட்ஸ் மற்றும் சயின்ஸ் பள்ளி எஸ்.முருகன், டைமண்ட் பள்ளி டைமண்ட் பஷீர், தாய்தமிழ் பள்ளி மாதவன், மீனாட்சி பள்ளி எம்.ராஜ், கலைமகள் பள்ளி கே.பாண்டித்துரை, ஸ்ரீமுருகேஸ்வரா பள்ளி எம்.சின்னையா, ஜுசஸ் கிங்டம் பள்ளி ஏ.ஜெ.இக்னேசியஸ், சுவாமி விவேகானந்தா பள்ளி பி.கருணாகரன், ஸ்ரீ அம்பாள் பள்ளி ஆலோசகர் ஏ.சரவணன், மருதம் பள்ளி சுப.தமிழ்மாறன், பெருங்களுர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பள்ளி வெங்கடேஷ் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். விழாவில் லால் கிதாப் வெங்கடேஷ் எழுதிய டைம் டிராவலர் டான் கிளைவுட் 8023 என்ற புத்தகத்தை தலைவர் அசரப் அன்சாரி வெளியிட சிறப்பு அழைப்பாளார் மனோகரன் ஜெயக்குமார் பெற்றுக் கொண்டார்.

    Next Story
    ×