search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா
    X

    புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா

    • புதுக்கோட்டையில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது
    • அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சன்மார்க்க நெறியினை பரப்பும் பணியில் ஈடுபட்ட 31 நபர்களுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சரால் வள்ளலார் 200 முப்பெரும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும், பல்வேறு நகரங்களில் இவ்விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் வள்ளலார் 200 முப்பெரும் விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது. எல்லாம் உடைய அற்புத ஜோதி என்கின்ற ஜோதியினை கடவுளாக கொண்டுள்ளார். வள்ளலார் அவர்களின் கொள்கையினை பின்பற்றியும் மற்றும் அவர்களின் கருத்துக்களின்படி வாழ்வதன் மூலம் சிறப்பான வாழ்க்கையினை மேற்கொள்ள முடியும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் என்பதையும், சுத்த சன்மார்க்கத்தினை முக்கிய இலச்சியமாக்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டினையும் உள்ளிட்டவைகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    எனவே நாம் அனைவரும் வள்ளலாரின் வாழ்க்கை முறையினை நன்கு அறிந்துகொண்டு அதன்வழி பின்பற்றி நல்வாழ்வினை வாழ வேண்டும் என பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) சூரியநாராயணன், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மணிவண்ணன், உதவி ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) அனிதா, அறங்காவலர் குழுத் தலைவர் தவ.பாஞ்சாலன், வட்டாட்சியர் விஜயலெட்சுமி, மெய். அருள் நந்தி சிவம், மணி, கிருஷ்ணமூர்த்தி, அருள் (எ) இளங்கோ, இலாபராசு, திருப்பதி, மரு.ராமதாஸ், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


    Next Story
    ×