search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விராலிமலையில் களை கட்டிய ஆட்டு சந்தை
    X

    விராலிமலையில் களை கட்டிய ஆட்டு சந்தை

    • விராலிமலையில் ஆட்டு சந்தை களை கட்டியுள்ளது
    • வர்த்தகம் ஒரு கோடியை தாண்டியது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் ஆட்டு சந்தை அப்பகுதிகளில் மிகவும் பிரபலமாகும். அதிகாலை தொடங்கும் இந்த ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் முதல் நாள் இரவே லோடு வாகனங்களில் விராலிமலைக்கு வந்து தங்கி இருந்து ஆடுகளை வாங்கி செல்லுவது வழக்கம்.

    அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில் இருந்தும் வியாபாரிகள் வந்து விராலிமலை சந்தையில் ஆடுகளை வாங்கி செல்வது என்பது விராலிமலை ஆடுகளின் தனி சிறப்பாகும். இயற்கையான முறையில் மட்டுமே வளர்க்கப்படும் இந்த ஆடுகளை இறைச்சி கடைக்காரர்கள் மாமிசமாக விற்கும் போது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கி செல்வதாக இறைச்சிக்கடைக்காரர்கள் கூறுகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற விராலிமலை வார சந்தை வழக்கம் போல் இன்று அதிகாலை கூடியது. ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வர தொடங்கியதை தொடர்ந்து வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர். ஆடுகளின் விலையைப் பொறுத்தவரை சராசரியான தொகைக்கே ஆடுகள் விற்கப்பட்டன. காலை 7:30 மணி நிலவரப்படி ஒரு கோடியையும் தாண்டி வர்த்தகம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

    Next Story
    ×