search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அன்னவாசல் அருகே மீன் பிடி திருவிழா
    X

    அன்னவாசல் அருகே மீன் பிடி திருவிழா

    • மீன்களை உற்சாகமாக அள்ளி சென்ற கிராமமக்கள்
    • அன்னவாசல் அருகே புதூர் பெரியகுளத்தில் நடைபெற்றது

    விராலிமலை,

    புதுக்கோட்டை மாவட் டம் அன்னவாசல் அருகே உள்ள புதூர் பெரிய–குளத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து குளம் நிறைந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண் டுதல். இந்தநிலையில் கடந்த ஆண்டு பரவலாக மழை பெய்ததால் இந்த குளம் நிரம்பியது.மேலும் அந்த குளத்தில் மீன்களும் அதிக அளவில் இருந்தன. இதனையடுத்து குளத்தில் தண்ணீர் வற்றியதால், குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து கிராமமக்கள் சேர்ந்து திருவிழா–வாக கொண்டாடி மகிழ்வதும் வழக்கம்.இதனையடுத்து இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. முன்னதாக ஊர் முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டை எடுத்து வீசிய உடன், குளத்து கரையில் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கொண்டு வந்த கச்சா, தூரி, வலை, சேலை என அவற்றை குளத்தில் வீசி ஒவ்வொருவரும் மீன் பிடிப்பதும், தங்களுக்கு கிடைக்கும் மீன்களை எடுத்து சென்று சமைத்து சாப்பிடுவதும் கிராம மக்களுக்கு மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி ஆகும்.இந்த மீன்பிடி திருவிழா சகோதரத்துவத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் ஜாதி, இன பாகுபாடு அற்ற தன்மையையும் தரும் ஒரு உன்னத நிகழ்ச் சியாகும். இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட் டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கெழுத்தி, குரவை, ஜிலேபி, அயிரை, கட்லா, கெண்டை, விரால் ஆகிய மீன்களை பிடித்தனர். பின்னர் பிடித்த மீன்களை பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அதிகாலை முதலே கூடியிருந்தனர். ஒரே நேரத்தில் குளத்தில் இறங்கி மீன்பிடித்த சம்பவம் அனைவருக்கும் மகிழ்ச் சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×