search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளரிளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி
    X

    வளரிளம் பெண்களின் பாதுகாப்பு குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி

    • 18 வயது வரை அவசியம் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
    • ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.

    அவினாசி :

    பள்ளி இடைவிலகி பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டு அவதியுறும், பல்வேறு இன்னலுக்கு ஆளாக வாய்ப்புள்ள 15 வயது முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பெண் குழந்தைகள் மத்தியிலும் அவர்கள் சார்ந்திருக்கும் சமூகத்தினரிடையேயும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'வளரிளம் பெண்களின் தொடர்கல்வி மற்றும் பாதுகாப்பு' குறித்த பொம்மலாட்ட நிகழ்ச்சி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் புனிதவதி வரவேற்றார். சி.எஸ்.ஈ.டி அமைப்பின் செயல் இயக்குனர் சி.நம்பி அறிமுகம் மற்றும் நோக்கவுரையில் வளரிளம் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், பெண் கல்வி எந்த அளவிற்கு சமூகம் மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக உள்ளது, தனிமனிதனின் திறன்கள் மேம்படவும், தேசத்தின் மனிதவளம் மேம்படவும் அனைவரும் குறைந்தபட்சம் 18 வயது வரை அவசியம் கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.

    பொம்மலாட்ட நிகழ்ச்சி மூலம், நகைச்சுவை காட்சிகளுடன், வளரிளம் பெண்களின் தொடர்கல்வியின் அவசியம், அந்த வயதில் வேலைக்கு செல்வதால் ஏற்படும் பிரச்சினைகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் ஆகியவை பொய்க்கால் குதிரை மற்றும் இதர கிராமிய நடனங்களுடன் எடுத்துரைக்கப்பட்டது. இதை ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் கண்டுகளித்தனர்.

    Next Story
    ×