search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பூசாரிபட்டி அரசு பள்ளியில்   சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
    X

    பாராட்டு சான்றிதழ்களை போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் வழங்கிய போது எடுத்த படம்.

    பூசாரிபட்டி அரசு பள்ளியில் சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

    • தருமபுரி நகரத்தில் மட்டும் 450 சி.சி.டி.வி கேமரா பொருத்தபட்டுள்ளது.
    • இதுவரை 78 குற்றவாளிகளை பிடித்து, 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்து ஒப்படைக்கபட்டுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி அடுத்த சோகத்துர் ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டி கிராமத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5 வயது முதல் 17 வயது வரை அரசு தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தனியார் பயிற்சி மையம் சார்பில் சில மாதங்களாக சதுரங்க பயிற்சி அளிக்கபட்டு வந்தது.

    அதனை தொடர்ந்து நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக சதுரங்க போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்று வந்தது.

    அதனையடுத்து இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத், ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் 4 பேருக்கும், பெண்கள் பிரிவில் முதல் 4 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களும், கோப்பையும் வழங்கி பாராட்டினார்.

    இதனையடுத்து மாணவர்களிடம் பேசிய அவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக நான் பொறுப்பேற்ற பிறகு தருமபுரி நகரத்தில் மட்டும் 450 சி.சி.டி.வி கேமரா பொருத்தபட்டுள்ளது.

    இதுவரை 78 குற்றவாளிகளை பிடித்துள்ளதாவும், 100 சவரன் நகைகள் பறிமுதல் செய்து ஒப்படைக்கபட்டுள்ளது என்று கூறினார். மேலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் மீது முழு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்.பெற்றோர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் நேர்மையான முறையில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமது பிள்ளைகளை நல்வழியில் கொண்டு வரமுடியும் எனவும் கூறினார்.

    அப்பள்ளி மாணவ மாணவிகளை விளையாட்டில் ஆர்வத்தை கொண்டு வரும் வகையில், அப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கபட்டது.

    Next Story
    ×