search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வெறிநாய் தடுப்பூசி முகாம்
    X

    வெறிநாய் தடுப்பூசி முகாம்

    • செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.
    • வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கால்நடை மருத்துவ வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது. முகாமினை பொ.மல்லா புரம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

    அரூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ராமகிரு ஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாம் பணி களை டாக்டர் ரவி மபுகான், பொற்செழியன், செல்வகுமார், கண்ணகி சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 150 நாய்கள் உள்ளிட்ட செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.

    இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பு மற்றும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் ரவி, ஆசிரியர்கள் செந்தில், முரளி, சேகர், தனசேகரன், கவியரசு மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத் அலுவலர் தமிழ் தென்றல் சிறப்பாக செய்திருந்தனர்.பாப்பிரெட்டிப்பட்டி, பிப்.12-

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் கால்நடை மருத்துவ வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு வெறிநாய் தடுப்பூசி முகாம் நடை பெற்றது. முகாமினை பொ.மல்லா புரம் பேரூராட்சி தலைவர் சாந்தி புஷ்பராஜ் தொடங்கி வைத்தார்.

    அரூர் கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ராமகிரு ஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாம் பணி களை டாக்டர் ரவி மபுகான், பொற்செழியன், செல்வகுமார், கண்ணகி சந்திரசேகர் ஆகியோர் மேற்கொண்டனர்.

    இதில் சுமார் 150 நாய்கள் உள்ளிட்ட செல்லப்பி ராணிகளுக்கு வெறிநாய் நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது.

    இந்நிகழ்வினைத் தொடர்ந்து வெறிநாய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

    இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு வெறிநாய் நோய் தடுப்பு மற்றும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, கால்நடை மருத்துவர் ரவி, ஆசிரியர்கள் செந்தில், முரளி, சேகர், தனசேகரன், கவியரசு மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்டத் அலுவலர் தமிழ் தென்றல் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×