என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முல்லை பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை
- கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
- முல்லை பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
பருவமழை கைகொடுத்த நிலையில் முல்லை பெரி யாறு அணை நீர்மட்டம் 140 அடி வரை உயர்ந்தது . அதனை தொடர்ந்து தமிழக பகுதிக்கும் கேரளாவுக்கும் கூடுதல் தண்ணீர் திறக்க ப்பட்டது.
மேலும் மழையும் குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரியத்தொடங்கி யது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரளாவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்பி டிப்பு பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 1081 கனஅடி நீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 135.95 அடியாக உள்ளது. 933 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது. 728 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 769 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 124.47 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படு கிறது.
பெரியாறு 18.2, தேக்கடி 13.2, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள கூடலூர், கம்பம், உத்தம பாளையம் பகுதியில் இன்று காலையில் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் பொது மக்கள், மாணவ-மாணவி கள் சிரமமடைந்தனர்.