search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருவிபோல் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழைநீர்
    X

    அருவிபோல் ஆர்ப்பரித்துக்கொட்டும் மழைநீர்

    • டேனிஷ்பேட்டை வழியாக வரும் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • நதியின் பக்கவாட்டில் சுமார் 500 மீட்டர் நீளமும் 30 அடி உயரமும் கொண்ட கலுங்கு உருவாக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழை யின் காரணமாக ஏற்காட்டில் இருந்து டேனிஷ்பேட்டை வழியாக வரும் சரபங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அணைமேடு பகுதியில் கடந்த 800 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை ஆண்ட குறுநில மன்னர்களால் சரபங்கா நதியில் ஏற்படும் வெள்ள பெருக்கை கட்டுப்படுத்த நதியின் பக்கவாட்டில் சுமார் 500 மீட்டர் நீளமும் 30 அடி உயரமும் கொண்ட கலுங்கு உருவாக்கப்பட்டுள்ளது .

    சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் இந்த கலுங்கு வழியாக வெளியேறும் தண்ணீர் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும்.இந்த வழியாக வெளியேறும் தண்ணீர் மாட்டையம்பட்டி வழியாக 5 கிலோமீட்டர் பரப்பளவில் விவசாய நிலங்களை செல்வ செழிப்பாக்கி மீண்டும் சரபங்கா நதியில் இணைந்து ஓடி காவிரியில் சங்கமம் ஆகிறது .இத்தகைய இயற்கை அழகை சுற்றுவட்டாரப்பகுதி மற்றும் , வெளி ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து ரசித்த வண்ணம் உள்ளனர் .அதனை தொடர்ந்து மாலை நீர் வீழ்ச்சியை காண வந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் அணைமேடு அருவியில் கொட்டும் அழகை தனது செல்போனில் படம் எடுத்தார்.

    Next Story
    ×