search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம்
    X

    ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம்

    • ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரத்தினேசுவரர் கோவில் உள்ளது. மஞ்சப்புத்தூா் ஆயிர வைசிய சமுதாய மக்களுக்கு பாத்தியமான இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து 3 யாக சாலை பூஜைகள் நடைபெற்று நிறைவடைந்தது.

    இன்று (12-ந் தேதி) அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைக்கு பின் பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா்கள் ஞானசேகரன், சாந்த மூர்த்தி, சரவணன், ஆயிர வைசிய மகாஜனசபை தலைவா் மோகன் மற்றும் நிர்வாகிகள், கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிக் கமிட்டியினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×