search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி
    X

    வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி

    • வேலை வாங்கித் தருவதாக ரூ. 2 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • போலியான நிறுவன பெயரில், போலியான ஆவணங்களை அனுப்பி நம்ப வைத்து பல்வேறு கட்டணங்களை வசூலித்து ஏமாற்றினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் ரோஸ் நகரைச் சேர்ந்தவர் தக்கலை பீர்முகமது. இவரது மகன் முகமது அப்துல் அப்பாஸ் (வயது21). இவர் டிப்ளமோ மரைன் இன்ஜினியரிங் படித்துவிட்டு இணையத்தில் வேலை தேடிக் கொண்டிருந்தார்.

    இந்நிலையில் தனியார் நிறுவனத்தின் பெயரில் கப்பலில் டி.எம்.இ. வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாகவும், அதில் சேர விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தனது சுய விபரத்தினை அனுப்பி வைக்கும்படி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை நம்பிய அப்பாஸ் அவர்கள் தெரிவித்தபடி உரிய ஆவணங்களை அனுப்பி வைத்துள்ளார். தொடர்ந்து மின்னஞ்சலை பார்த்தபோது அப்பாஸ் தேர்வு செய்யப்பட்டதாக தகவல் வந்தது.

    இந்த தகவலை நம்பி, அவர்கள் கூறிய தகவலின்படி அவர்களால் கொடுக்கப்பட்ட வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணையில் ரூ1.95 லட்சம் அனுப்பி உள்ளார்.

    ஆனால் பணி குறித்து எந்த தகலும் அதன்பின் இல்லை. வேலைக்கு சேருவது குறித்து விபரம் கேட்ட போது சரியான பதில் தெரிவிக்காமலும், தொடர்பினை தவிர்த்த காரணத்தினை அறிந்து, சந்தேகம் ஏற்பட்டு இணையதளத்தில் தேடி பார்த்த போது ஏமாற்றுக்கா ரர்கள் என தெரியவந்தது. போலியான நிறுவன பெயரில், போலியான ஆவணங்களை அனுப்பி நம்ப வைத்து பல்வேறு கட்டணங்களை வசூலித்து ஏமாற்றினர். இது குறித்து பணத்தை இழந்த அப்பாஸ் ராமநாதபுரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×