search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பொங்கல் விழா கொண்டாட்டம்

    • முத்துப்பேட்டை, கீழக்கரை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டப்பட்டது.
    • ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை கவுசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் மதநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் கல்லூரி வளாகத்தில் கல்லூரி செயலர் மரிய சூசை அடைக்கலம் தலைமையில், கல்லூரி முதல்வர் ஹேமலதா முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பாரம்பரிய உடை அணிந்து, சமத்துவ பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி னர். தொடர்ந்து கல்லூரி அரங்கத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.

    கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கல்லூரி முதல்வர் அலாவுதீன் தலைமையில், துணை முதல்வர் ஷேக் தாவூத் முன்னிலையில் நடைபெற்றது. விழா ஒருங் கிணைப்பாளர் கணேஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பொங்கல் பொங்கி வந்த போது மாணவ மாணவியர்கள் பொங்கலோ பொங்கல் என உற்சாக முழக்கமிட்டனர். விழாவை முன்னிட்டு கரகாட்டம்,ஒயிலாட்டம், கும்மியாட்டம், உரியடி, சிலம்பாட்டம், கபடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியினை கல்லூரி விரிவுரையாளர் மரியதாஸ் தொகுத்து வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் உமையாள் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி இயக்குனர் மருதாசல மூர்த்தி மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் செய்தனர்.

    Next Story
    ×