search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தார் சாலை பணி:பொதுமக்கள் அவதி
    X

    தார் சாலை அமைக்க கற்கள் குவிக்கப்பட்டு கிடப்பதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

    தார் சாலை பணி:பொதுமக்கள் அவதி

    • தார் சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் பொபாதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 21 வார்டுகள் உள்ளன. வட க்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான பிரதான சாலையாக இருக்கும் சி.எஸ்.ஐ. சர்ச் முதல் பாபு அப்துல்லா ஆட்டோ நிறுத்தம் வரை ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலைப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    15 நாட்களுக்கு முன்பு பழைய தார் சாலையை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. தோண்டப்பட்ட தார்ச்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் அந்தப்பகுதியில் செல்லக்கூடிய பள்ளி மற்றும் கல்லூரி வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதனால் அந்தப்பகுதி குண்டும் குழியுமாக உள்ளதால் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் சிரமத்தி ற்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் தார்ச்சாலை அமைப்பதற்காக வடக்கு தெரு கருணை பள்ளி செல்லும் வழியில் 20 நாட்களுக்கு முன்பு நடுரோட்டில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. தார்சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் நடுரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லி கற்களால் இரவு நேரங்களில் செல்லக்கூடிய இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சைக்கிளில் செல்லக் கூடிய சிறுவர்கள் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

    இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த ப்பகுதியில் கொட்டப்பட்ட ஜல்லிகற்களை அகற்றி விரைவில் தார்சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×