search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின
    X

    தொடர் மழையால் 52 ஏரிகள் நிரம்பின

    • நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
    • விநாடிக்கு 452 கனஅடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட் டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பருவமழை மற்றும் மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை யாக கலெக்டர் வளர்மதி உத்தர வின்பேரில் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய்த்துறை, மின் வாரியம், பொதுப்ப ணித்துறை, சுகாதாரத்துறை. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட பல்வேறு துறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், தாழ்வான பகுதிகள், நீர்நிலைகளின் கரையோரம் தங்கி உள்ளவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு தற்காலிக மையங்களில் தங்க வைக்கப்பட்டு வரு கின்றனர். மேலும், காவேரிப் பாக்கம்-சோளிங்கர் சாலை, ஆற்காடு-செய்யாறு செல்லும் சாலையில் நேற்று மழை காரணமாக சாய்ந்த மரங்களை உடனடி யாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆற்காடு, செய்யாறு பகுதியில் மரம் விழுந்த காரணத்தினால் 7 மின்கம்பங்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்து சென்ற நகராட்சி அதிகாரி கள், காவல்துறை யினர், மின்வாரியத்து றையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

    மழை காரணமாக நெமிலி கிராமத்தில் சிறுவளையம் பகுதியில் 50 ஏக்கருக்கு மேல் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. பனப்பாக்கம் -பன்னியூர் செல்லும் தரைப்பாலத்தில் மழை வெள்ளம் வந்ததால், போக்கு வரத்து துண்டிக்க ப்பட்டு பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்க ப்பட்டது. வருவா ய்த்துறையினர் சார்பில் தடுப்பு அமைக் கப்பட்டது.

    நெமிலி வட்டம் காவேரிப்பாக்கம் பெருவைளையம் தச்சம் பட்டறை செல்லும் தரைப் பாலத்தில் நீர்வரத்து அதிகரித்ததால். பொது மக்கள் இந்த வழித்தடத்தில் செல்லாத வண்ணம் வருவாய்த்து றையினர் தடுப்புகளை அமைத்தனர்.

    ஆற்காடு குக்குண்டி ஏரி, நெமிலி வட்டம் நாகவேடு பாடி ஏரி உட்பட பல்வேறு ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்தம் 369 ஏரிகளில் முழுமையாக 52 ஏரிகள் நிரம்பியுள்ளன. பாலாறு அணைக்கட்டில் இருந்து மகேந்திராவாடிக்கு 89 கன அடியும், காவேரிப்பா க்கத்துக்கு 133, சக்கரமல்லூரக்கு 65, தூசி 165 என ஆகிய ஏரிகளுக்கு விநாடிக்கு மொத்தம் 452 கனஅடி நீர் திருப்பிவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×