search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புத்தக கண்காட்சி
    X

    புத்தக கண்காட்சியை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்து பார்வையிட்ட போது எடுத்த படம்.

    அறிஞர் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புத்தக கண்காட்சி

    • அமைச்சர் காந்தி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்
    • மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தி வாசிப்பாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள், இளைஞர்கள், மாணவ- மாணவிகள் ஆகியோர் அதிகப்படியான புத்தகங்களை வாங்கி பயன் பெறும் வகையில் புத்தக கண்காட்சி வாலாஜா அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொடங்கி 22-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன் அனைவரும் வரவேற்றார். ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை பார்வையிட்டார்.

    இந்த கண்காட்சியில் 50-க்கும் மேற்பட்ட சிறப்பு நூல் அரங்கங்கள், மிகச் சிறந்த அரியவகை நூல் தொகுப்புகள், ரூ.10 முதல் ரூ.1000 வரை அனைத்து நூல்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி, நூல்கள் வாங்குபவர்களுக்கு தினமும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படுகிறது. அனைத்து நாட்களிலும் மாலை 5 மணி அளவில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள், புகழ்பெற்ற பேச்சாள ர்களின் நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நூல் வெளியீட்டு விழாக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தி னர்களின் கருத்தரங்குகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கதை சொல்லும் போட்டிகள், போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்க ரமணன், புவனேஸ்வரி சத்தியநாதன், அனிதா குப்புசாமி, வடிவேல், கலைக்குமார், நகரமன்ற தலைவர்கள் ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், பேரூர் தலை வர்கள், தென்கடப்ப ந்தாங்கல் ஊராட்சிமன்ற தலைவர் பிச்சமணி, கல்லூரி முதல்வர் பூங்குழலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகரமன்ற துணை தலைவர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட இயக்குனர் லோகநாயகி நன்றி கூறினார்.

    Next Story
    ×