search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்
    X

    போதை பொருட்களுக்கு ஏதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி கொடியசைத்து தொடங்கிவைத்த போது எடுத்த படம்.

    போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்

    • அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்
    • 1000த்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் டாக்டர் அப்துல்கலாம் 91-வது பிறந்தநாளை முன்னிட்டும், போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்துல் கலாம் கனவு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.

    இந்த மாரத்தான் போட்டியை அமைச்சர் ஆர்.காந்தி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

    மாரத்தான் போட்டியானது 11 மற்றும் 21 கிலோமீட்டர் தூரம் ஆகிய இரு பிரிவுகளாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 1000த்திற்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    இந்த மாரத்தான் போட்டியானது வாலாஜாபேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் தொடங்கிய அம்மூர், மாந்தாங்கல் முத்துக்கடை ஆகிய பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், டி.எஸ்.பி பிரபு, ரோட்டரி ஆளுநர் பழனி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், வன்னிவேடு ஊராட்சிமன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல், வாலாஜா ஸ்போட்ஸ் கிளப் தலைவர் பாலாஜி, அப்துல் கரீம் மற்றும் கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×