search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகடன்
    X

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கு வங்கிகடன்

    • 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், நெமிலி மற்றும் காவேரிப்பா க்கம் ஆகிய வட்டாரங்களை சார்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சுயஉதவிக் குழு மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக 30 சதவிகித மானியத்துடன் கூடிய வங்கிகடன் பெற விண்ணப்பிக்கலாம்.

    இந்த திட்டத்தில் 10 சதவிகிதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவிகித வங்கிகடன், 30 சதவிகித திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்ப டையில் தொழில்கடன் வழங்கப்பட உள்ளது.

    ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையுள்ள தொழில்திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்திற்கும் மேலான தொழில்திட்டம் சிறு தொழிலாகவும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

    சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.திட்டத்தில் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்தோர், ஆதரவற்ற பெண்கள் மற்றும் நலிவுற்றோர்கள் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவிகிதம் மட்டுமே பயனாளி களின் பங்களிப்பாக இருந்தால் போதுமானது.

    இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில்மைய அலுவலர்களை (செல்-9344672756) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளர்.

    Next Story
    ×