search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி
    X

    அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் வளர்மதி.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி

    • அமைச்சர் காந்தி வழங்கினார்
    • மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் வளர்மதி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அரசு பள்ளியில் நன்றாக படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் இன்றைய கணினி உலகில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள ஏதுவாக தேர்வுகளுக்கான பாடப்பிரிவுகள் அடங்கிய சிறப்பு செயலிகள் நீட், ஜே.இ.இ பாடங்கள் அடங்கிய மற்றும் இணைய வசதிகளுடன் உள்ள கையடக்க கணினி சமூக பங்களிப்பு நிதியில் வழங்கிட கலெக்டர் வளர்மதி நடவடிக்கை எடுத்தார்.

    அதனடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி தேர்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அதிகம் பெற்ற 24 அரசு பள்ளிகளை சேர்ந்த 40 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் தேர்வு செய்யப்பட்ட மாண வர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட ஊரா ட்சிக்குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகரமன்ற தலைவர் சுஜாதாவினோத், சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜி அப்துல்மஹித் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×