என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட் டுள்ள திருத்தேர் வெள்ளோட்டம் குறித்த பல்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்தினகிரி கோவில் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது .
தேர் வெள்ளோட்டம்
ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 30 அடி உயரம் கொண்ட திருந்தேர் வெள்ளோட்டப் பெருவிழா அடுத்த மாதம் 8 - ந் தேதி நடைபெற உள்ளது.
திருந்தேர் வெள்ளோட்ட நிகழ்வுக்கு செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து திருக்கோவில் மண்டபத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் பல்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவில் பரம்பரை அறங்காவலர் பால முருகனடிமை சாமிகள் முன்னிலை வகித்தார். செயல் அலு வலர் சங்கர் வரவேற்றார். ஆலோசனைக் கூட்டத்தில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் பேசியதாவது:-
கோவில் மலையை சுற்றி சுமார் 1 கி.மீ தூரத்திற்கு திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெறும்.இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் மின் கம்பி பாதைகளை தேர்ச்சொல்லும்போது பாதிப்படையாத வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை தேரின் உறுதி தன்மை ஆய்வு செய்து சான்று அளிக்கவும், திருத்தேர் வெள்ளோட்டத்தின் போது தேரில் மின்சாதனங்களை கொண்டு அலங்க ரிக்கும்போது விபத்து ஏற்படாத வகையில் பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.
நெடுஞ்சாலை துறையினர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் வேக தடைகளை அகற்றி எளிதில் அதனை மாற்றி அமைக்கும் வகையில் தடுப்புகளை அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, வாலாஜாபேட்டை தாசில்தார் ஆனந்தன், ராணிப்பேட்டை டி.எஸ்.பி பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தேர் வெள்ளோட்டம் நடைபெறும் பகுதியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.