search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    சோளிங்கரில் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
    X

    சோளிங்கரில் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

    • மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் நிறுத்தம் நீடித்தது.
    • அதிகாரிகள் சரியான பதில் அளிப்பதில்லை என குற்றச்சாட்டு

    சோளிங்கர்:

    சோளிங்கர் மற்றும் சுற்று பகுதிக்கு பாணாவரம் கூட்டு சாலை பகுதியில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

    இதனால் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பஜார் வீதி, கிழக்கு பஜார், கிருஷ்ணசாமி முதலி தெரு நாரை க்குளம், போர்டின் பேட்டை, வெங்கட்ராமன் பிள்ளை தெரு செங்குந்தர் பெரிய தெரு, தோப்புளம்மன் பகுதி, போஸ்ட் ஆபீஸ் தெரு, ராமசாமி முதலி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களிலும் பில்லாஞ்சி, சோமசமுத்திரம், கல்பட்டு, ஈடிகை பேட்டை உள்ளிட்டகிராம புறப் பகுதிகளில் மாலை 6.15 மணிமுதல் இரவு 10.15 மணிவரை மின் வெட்டு நீடித்தது.

    தொடர்ந்து 4மணிநேரம் மின்வெட்டால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த விதமான பதிலும் இல்லை. தொடர்ந்து மின்வெட்டால் மாணவ மாணவிகள் விளக்கு வெளிச்சத்திலும், மொபைல் வெளிச்சத்திலும் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பிறந்த குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டனர்.

    இதுபோல் மின்வெட்டு அடிக்கடி ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள் ஆளாகினார்கள் இது குறித்து அதிகாரியிடம் கேட்டபோது எந்த பதிலும் தெரிவிப்பதிலை என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர் .இனி வருங்காலங்களில் அதிகாரிகள் மின்வெட்டு ஏற்படாதவாறு செயல்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

    Next Story
    ×