search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊழல் தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தொடங்கி வைத்த காட்சி.

    ஊழல் தடுப்பு குறித்து போலீசார் விழிப்புணர்வு ஊர்வலம்

    • நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்
    • பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ந்தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் அனுசரித்து வருகிறது.

    நேற்று ராணிப்பேட்டையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்திற்கு லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ஊர்வலம் ராணிப்பேட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. ஊர்வலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ்உள்பட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி தலைமையில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணி பஸ் நிலையம் தொடங்கி சிஎல் சாலை வழியாக வாரசந்தை மைதானம் வரை நடைபெற்றது.

    இதில் சப் இன்ஸ்பெக்டர்கள் கணேசன், பிரகாஷ் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×