என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறை
- நோயாளிகள், பொதுமக்கள் அவதி
- மாவட்ட நிா்வாகம் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
நெமிலி:
பாணாவரம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை 2006-ம் ஆண்டு 30 படுக்கைகளுடன் இந்தியாவிலேயே முதன் முதலில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை செய்ய தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை என்ற பெருமை கொண்டது.
மேலும் 2007-ம் ஆண்டு 30 யூனிட்வரை ரத்தம் சேமிப்பு வங்கியும் தொடங்கப்பட்டது. 2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் சிறந்த பிரசவத்திற்கான தமிழக அரசின் விருதைப்பெற்றது. இங்குள்ள மருத்துவமனையால் இப்பகுதியை சுற்றியுள்ள சுமாா் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களை சோ்ந்த ஏழை எளிய மக்கள் கர்பிணிகள், குழந்தைகள், விவசாயிகள் கூலி தொழிலாளா்கள் என பலரும் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்துள்ளனா்.
ஆனால் இன்று போதிய டாக்டர்கள் இல்லாததாலும், கா்பிணிகள் அறுவை சிகிச்சை இங்கு செய்யாததாலும் முறையான சிகிச்சையின்றி கா்பிணி பெண்கள் அலைகழிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனா்.
அதேபோல் இங்குள்ள மருத்துவமனையில் போதிய மருத்துவ பிரிவுகள் இருந்தும், மருத்துவ கருவிகள், மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அதற்கான மருத்துவா்கள், முறையான தொழில்நுட்புனா்கள் இல்லாததால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக நோயாளிகள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
அதேபோல் இப்பகுதியை சுற்றி விவசாயமே பிரதானமாக விளங்குவதால் விவசாயிகள் நிலங்களில் பணி செய்யும் தொழிலாளா்கள் எதிா்பாரத விதமாக பூச்சு, பாம்பு ,தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் கடிக்கு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனா். அப்படி வருபவா்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால் சோளிங்கா் மற்றும் வாலாஜாபட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கின்றனா் அப்படி போகும் போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேர முடியாமல் பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே சம்பந்தபட்ட துறையினரும், மாவட்ட நிா்வாகமும், உடனடியாக இந்த மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை தேவைகளை நிறைவேற்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு பயனளிக்கும் வகையில் மருத்துவ சேவையை செய்திட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலர்களும் எதிா்பார்கின்றனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்