search icon
என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • தூங்கிக்கொண்டிருந்த போது துணிகரம்
    • பைக் மற்றும் செல்போன் பறிமுதல்

    காவேரிப்பாக்கம்:

    தூத்துக்குடி மாவட்டம் முந்தைய புரத்தைச் சேர்ந்தவர் முத்துவேல் (வயது 31). டிரைவர்.

    இவர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து மினி வேன் மூலம் லோடு களை ஏற்றி க்கொண்டு வேலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    ராணிப்பேட்டை மாவ ட்டம், காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டி ருந்தார். அப்போது சாப்பிடுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஓட்டல் அருகே வேனை நிறுத்தினார்.

    ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வேனில் சிறிது நேரம் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் முத்து வேல் செல்போனை திடீரென பறித்து கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துவேல் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடி சென்ற திருமலை ச்சேரி பகுதியைச் சேர்ந்த தீபக், வாலாஜாவை சேர்ந்த கோகுல் (22), மோனீஸ்வரன் (21), பெங்களூரைச் சேர்ந்த வெங்கடேசன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து பைக் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    • வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் குவிந்தனர்
    • பல்லக்கில் சாமிக்கு சிறப்பு அலங்காரம்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசுவாமி, வள்ளி, தேவசேனா கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவர், உற்சவர் சுப்ரமணியசுவாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

    இதை தொடர்ந்து சுப்ரமணிய சாமி, வள்ளி, தேவசேனா சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்கில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதில் பாணாவரம், நெமிலி, காவேரிப்பாக்கம், ஒச்சேரி, சோளிங்கர் பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மயங்கி கிடந்தவர் காஞ்சீபுரத்தில் மீட்பு
    • அரக்கோணத்தில் துணிகரம்

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ெரயில் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது பெண்கள் பெட்டியில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார்.லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

    அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார். மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

    இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

    மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ெரயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

    காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர்.ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கிகிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காஞ்சீபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சீபுரம் சென்றவுடன் லட்சுமியை ெரயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து ஆசி பெற்று சென்றனர்
    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பல்வேறு யாகங்கள், பூஜைகள், சுமங்கலி பூஜை, நாட்டிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கி கடந்த 16-ந்தேதி முதல் வருகிற டிசம்பர் 18-ந்தேதி முடிய 64 நாட்கள் நடைபெறும் மஹோத்சவம்-2023 விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருக்கணித பஞ்சாங்கப்படி ராகு -கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு கேது பெயர்ச்சி மகா யாகம் நேற்று மாலை நடைபெற்றது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் ஆன ராகு கேதுவிற்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும், மாலையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி டாக்டர்.முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் ராகு கேது பெயர்ச்சி மகா யாகமும் நடைபெற்றது.

    முன்னதாக கணபதி ஹோமத்துடன், அஷ்ட நாக பூஜையும், இரவில் சர்ப்ப பலி பூஜைகளும் நடைபெற்றது.

    ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம்,ரிஷபம்,மிதுனம் கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம், துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்களும், ராகு-கேது திசை, புக்தி நடைபெறுபவர்களும் மகா யாகம் மற்றும் ராகு கேது அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்டு பரிகாரங்கள் செய்து பீடாதிபதி முரளிதர சாமிகளிடம் ஆசியும், பிரசாதமும் பெற்று சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்

    • நகர செயலாளர் தலைமையில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் அ.தி.மு.க. 52- ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மஞ்சுநாதன் தலைமை தாங்கினார்.

    கழக தலைமை செயற்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, பொதுக்குழு உறுப்பினர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் எம்.எல்.ஏ, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ரவி, கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட அவைதலைவர் முன்னாள் சோளிங்கர் எம்.எல்.ஏ. சம்பத்,பேரூர் தலைவர் ஆறுமுகம், பேரூர் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கோதண்டன், கவுன்சிலர்கள் ராம்குமார், அருள்மொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வாகன சோதனையில் சிக்கினார்
    • பைக் பறிமுதல்

    கலவை:

    ராணிப்பேட்டை கலால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாலாஜா அணைக்கட்டு ரோட்டில் சென்னை -பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆற்காடு ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேஷ் (வயது 37) என்பதும், பைக்கில் 2கிலோ கஞ்சா வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து கலால் போலீசார் ராஜேஷை கைது செய்து, 2கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 20ஆயிரம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • கலெக்டர் வேண்டுகோள்
    • அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் இதர வளர்ச்சி உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட தொழில் நிறுவனங்கள் சமூகப் பங்களிப்பு நிதி வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது -

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் உள்ள மாவட்டமாக உள்ளது.

    தமிழ்நாடு அரசு மூலமாக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஆண்டுதோறும் வழங்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    இருந்த போதிலும் அத்தியாவசிய தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள் அதிகம் தேவைப்படுகிறது. ஆகவே தொழில் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியை வழங்க முன்வர வேண்டும்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி மற்றும் சுகாதார உட்கட்டமைப்புகளை மேம்படுத்திட பல்வேறு கோரிக்கைகள் இருந்து வருகிறது. சிறந்த முறையில் தொழில் செய்து வரும் அனைத்து தொழில் நிறுவனங்களும் தங்களுடைய சமூக பங்களிப்பு நிதியை வழங்கி ராணிப்பேட்டை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு நீங்களும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்தகூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், தொழில் நிறுவனத்தினர் கலந்துக்கொண்டனர்.

    • உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை
    • பல மாதங்களாக எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து கிடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

    பொதுமக்கள், தெருக்களின் பெயர்களை அறியும் வகையில், சில ஆண்டுகளுக்கு முன், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி, தெருக்களின் பெயர்களை குறிக்கும் வகையில், பேரூராட்சி சார்பில் சில்வர் பெயர் பலகையில் பெயர்களை ஸ்டிக்கராக ஒட்டி வைக்கப்பட்டது.

    பல லட்சம் ரூபாய் செலவில் அமைத்த தெரு பெயர் பலகைகளை, உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

    தற்போது, பெயர் பலகைகள், பெரும்பாலான இடங்களில் சேதம் அடைந்து, வீணாகி உள்ளன.ஒரு சில தெருக்களில் உள்ள பெயர் பலகையில், எழுத்துகள் அழிந்தும், உடைந்தும் விழுந்து பல மாதங்களாக உள்ளன.

    பெரும்பாலான இடங்களில் சில பெயர் பலகைகள் காணாமலும் போய் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பொது மக்கள், தெருக்கள் பெயர் தெரியாமல் அலைகின்றனர். இதனால் வெளியூர் வாசிகள், தெருக்களின் பெயர்களை அடையாளம் கண்டு செல்வதில் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கையை விரைந்து எடுத்து தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் தெரு பெயர்களை ஸ்டிக்கர் ஒட்டியும் மற்றும் பெயர் பலகை இல்லாத இடத்தில் புதிதாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்
    • ஒவ்வொரு திங்கட்கிழமையும் அறிக்கை அளிக்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில், வாலாஜா வட்டார அளவிலான சுகாதார பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் கனிமொழி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை வரவேற்றார்.

    கூட்டத்தில் கலெக்டர் வளர்மதி பேசியதாவது:-

    தற்போது டாக்டர்கள் காலிப்பணியிடம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ ர்கள் பற்றாக்குறை இருக்காது. கிராமப்புறத்தில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தினால் பொதுமக்களின் வாழ்க்கை மேம்படும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெரும்பாலும் பிரசவங்கள் நடைபெறுவதில்லை என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறும் குற்றச்சாட்டுகளை தவிர்க்கும் வகையில் இனிவரும் காலங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குழந்தை பிரசவம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    மேலும் ஒவ்வொரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பிரசவங்கள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உள்பட டாக்டர்கள் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை
    • நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க.செயலாளரும், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற ஜனவரி மாதம் 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்திட வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் 9-ந் தேதி வரை புதிய வாக்காளர்களை சேர்க்கவும், பெயர்கள் நீக்கவும், திருத்தம் செய்யவும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

    நவம்பர் மாதத்தில் 4,5,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

    இந்த முகாம்களில் விடுபட்ட வாக்காளர்களும், இடம் மாறிய வாக்காளர்களும் , 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் தங்கள் பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து படிவங்கள் அந்தந்த முகாம்களில் கொடுக்க வேண்டும்.

    அதன் அடிப்படையில் 2024ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாத பெயர்களையும், புதிதாக குடி பெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும் ,

    தொகுதியில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பெயர்களை தற்போதுள்ள பட்டியலில் இருந்து நீக்கவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    சிறப்பு முகாம்கள் நடைபெறவிருக்கும் நாட்களில் தி.மு.க.வின் ஒன்றிய, நகர,பேரூர், ஊர் கிளை, வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் வாக்கு சாவடி நிலைய முகவர்கள் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் முழுமையாக ஈடுபட்டு முனைப்புடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்ததில் சிக்கினார்
    • 3 செல்போன்கள் பறிமுதல்

     கலவை:

    திருவண்ணாமலை மாவட் டம் தண்டராம்பட்டு தாலுகா தென்முடியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்வந்த் (வயது 19), இவர் தனது நண்பர்கள் சரவணன், நித்தீஷ் ஆகியோருடன் ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து விளாப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ராணிப்பேட்டை அடுத்த திருவலம் பகுதியில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு செல்வதற்காக பைக்கில் 3 செல்போன்களை வைத்துவிட்டு வீட்டின் உள்ளே சென்றுவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது பைக்கில் வைத்திருந்த 3 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜஸ்வந்த் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஆற்காடு நல்ல தண்ணீர் குல தெருவை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவர் செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் நேற்று மாலை அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைப்பெற்றது.

    அதன்படி, காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஶ்ரீ பஞ்சலிங்கேஷ்சுவர் கோவிலில் சிவபெருமானுக்கு அன்னம் மற்றும் காய் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    இதேபோல்,அபிராமபுரம் பகுதியில் உள்ள சிவகாமவல்லி சமேத சர்வேசுவரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் விழா விமரிசையாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மூலத்துவாழியம்மன் அறக்கட்டளை மற்றும் அபிராமபுரம் சிவனடியார்கள் திருகூட்டம் செய்திருந்தனர்.

    ×