என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ராணிப்பேட்டை
- மின்சார சுவிட்சை கழற்றியபோது பரிதாபம்
- போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அடுத்த உப்பரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த வர் சம்பத் (வயது 45), விவசாயி. இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரது விவசாய நிலத்தில் நேற்று ஆழ்துளை கிணறுக்கான மின்சார சுவிட்சை கழற்றியுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுக்குறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சம்பத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் அவதி
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரக்கோணம்:
இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செந்தில் நகர், நாகலம்மன் நகர், கைனூர், வாணியம்பேட்டை உள்ளிட்ட அரக்கோணம் நகர எல்லை பகுதிகளுக்கு மின்சாரம் வழங் கப்படுகிறது. இந்தநிலையில் நேற்று இரவு சில நிமிடமே பெய்த லேசான மழை காரணமாக அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் தடைபட்டது.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில் இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிறு தூறல் அல்லது காற்று வீசினாலே மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக் கள், குழந்தைகள் கொசுக்கடியால் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், அடிக்கடி இது போன்று பல மணி நேரம் ஏற்படும் மின் வெட்டால் பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர்.
எனவே இது போன்று அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம், மின் வாரிய உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
- கிருத்திகையொட்டி நடந்தது
- வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசாமி, வள்ளி ,தேவசேனா கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
கோவிலில் மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டவாறு கிரிவலம் சென்றனர்.
இதில் பாணாவரம், சுற்றுவாட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- கலெக்டர் தகவல்
- நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கிகள், வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் காலியாக உள்ள 33 உதவியாளர்,எழுத்தர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பபட உள்ளது.
இதற்காக ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நவம்பர் 10-ந் தேதிஅன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வுக்கு தகுதிபெற்ற விண்ணப்பதா ரர்களிடமிருந்து விண்ணப்ப ங்கள் https://drbrpt.in என்ற இணையதளம் வழியாக மட்டுமே டிசம்பர் 1-ந்தேதியன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன. இதற்கான எழுத்துத் தேர்வு டிசம்பர் 24-ந் தேதிஅன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படும்.
இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கூட்டுறவு பயிற்சி ஆகும். முற்பட்ட வகுப்பி னருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஏனைய அனைத்து பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை.
மேலும் இது தொடர்பான விரிவான விவரங்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://drbrpt.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்
- சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்பட்டு வரும் பள்ளி, விடுதி மாணவர்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளி மற்றும் விடுதி மாணவர்களுக்கு உலக சுற்றுலா தினம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, கொடிய சைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலுவலர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்கு டியினர் நல அலுவலர் மூலமாக காரை குழந்தைகள் பள்ளி, காரை ஆதிதிராவிடர் விடுதி, ஆற்காடு கிருஷ்ணாவரம் அரசு பள்ளிகளை சேர்ந்த 50 மாணவர்கள் ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர். ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு வேலூ ரில் உள்ள மாவட்ட அறிவியில் மையம், கோட்டை, அரசு அருங்காட்சியகம், ஜலகண்டேஸ்வரர் கோவில், ஸ்ரீபுரம் தங்ககோவில் ஆகிய இடங்களுக்கு சென்றனர்.
நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் இளமுருகன், சுற்றுலா அலுவலக பணியாளர் அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் சிக்கியது
- போலீஸ் விசாரணை
அரக்கோணம்,
அரக்கோணம் அருகே கிழவனம், கெடவாரி கண்டிகை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு அரக்கோணம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ரெட்டைகுளம் பகுதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒரு லாரி நின்றிருந்தது. லாரி அருகே போலீசார் சென்றபோது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனைத்தொடர்ந்து லாரியை சோதனை செய்த
போது அரசு அனுமதியின்றி முரம்பு மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் வசூல்
- போக்குவரத்து அலுவலர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சிவக்குமார், அரக்கோணம் கிளை அலுவலக ஆய்வாளர் செங்குட்டுவேல் ஆகியோர் ராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாஜா, ஆற்காடு ஆகிய பகுதிகளில் நேற்று திடீர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதில் 243 வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டதில் தகுதி சான்று புதுப்பிக்கப்படாதது, அனுமதி சீட்டு இல்லாதது, வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதது, அதிக பாரம் ஏற்றி வந்தது என 25 வாகனங்கள் மீது ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ராணிப்பேட்டை வட்டார போக்கு வரத்து அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் சாலை போக்குவரத்து விதியை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கலெக்டர் திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்து றையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி சேவை மையத்தை திறந்து வைத்தார்.
இதில், மாவட்ட சமூகநல அலுவலர் பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி ஆனந்தன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் விஜயாமுரளி, வாலாஜா அரசு தலைமை மருத்து வமனையின் முதன்மை மருத்துவர் உஷாநந்தினி, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ரோந்து பணியில் சிக்கினார்
- போலீசார் கைது செய்து விசாரணை
அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று பஜார் பகுதி, காந்தி ரோடு, ரெயில் நிலையம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணியக்கார தெருவில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், அரக்கோணத்தை அடுத்த மூதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (வயது 46), அரக்கோணம் சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வனத்தையன் (40) என்பதும், சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.
- தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விளக்கம்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ராணிப்பேட்டை:
வாலாஜா நகராட்சி அலுவ லக கூட்ட அரங்கில் குழந்தை கள் பாதுகாப்பு அலகு சார் பில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடை பெற்றது.
நகராட்சி தலைவர் ஹரிணி தில்லை தலைமை தாங்கினார். கூட்டத்தில் குழந் தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், குழந்தை திரும ணம், குழந்தை கடத்தல், குழந் தைகள் மீதான வன்முறை, குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் குழந்தைகளுக்கு உதவிட சைல்டு லைன் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும், இது போன்ற குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கூட்டங்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் நிரோஷா, நக ராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மங்கையர்கரசன், குழந்தை வளர்ச்சிதிட்ட அலு வலர் அம்ச பிரியா, சைல்டு லைன் திட்ட ஒருங்கிணைப் பாளர் சதீஷ்குமார், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட மேலாளர் நாகப்பன் பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
- அப்பகுதி மக்கள் மீட்டனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் சாலை ஓரங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் அரக்கோணம் காஞ்சிபுரம் சாலையில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் எதிரே காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த சுற்றுலா பஸ் திடீரென பள்ளத்தில் இறங்கியது. உடனடியாக டிரைவர் சுதாரித்துக் கொண்டு வாகனத்தை நிறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து உள்ளே இருந்த பயணிகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து சாய்ந்து நின்ற சுற்றுலா பஸ்சை கிரேன் வரவழைக்கப்பட்டு பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
மேலும் இது குறித்து விசாரித்த போது சுற்றுலா பஸ்சில் பயணம் செய்தவர்கள் சிவகாசியை சேர்ந்தவர் என்பதும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு அரக்கோணம் வழியாக சென்னைக்கு செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதனால் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- கிராமத்தை நிராகரிக்கப்பதாக குற்றச்சாட்டு
அரக்கோணம்:
அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் நிர்மலா சவுந்தர் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள். ரவிச்சந்திரன், சுரேஷ் சௌந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்வதிர்க்காண் பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் குமார்:-
என்னுடைய ஊராட்சியில் எந்த ஒரு பணிகளையும் சரிவர நிறைவேற்றுவதில்லை. மேலும் அன்வதிர்க்கான் பேட்டை ஊராட்சியை நிராகரிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
கூட்டத்தில் தாராதகேஸ்வரி, பாலன், நாராயணசாமி, கருணாநிதி, குமார், நரேஷ், கோமதி, ஆஷா, வளர்மதி, சுந்தரமூர்த்தி, ரேவதி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கவுன்சிலர் கோமதி பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். மற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கோமதி வெளிநடப்பு செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்