என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார்: பிளஸ்-2 மாணவிக்கு டி.என்.ஏ. பரிசோதனை
- விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர்.
- சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள இரு கிராமத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாண வனும், மாணவியும் காதலித்து வந்தனர். கடந்த 25-ந் தேதி இரவு 7 மணியளவில் இருவரும் விக்கிரவாண்டி அருகே உள்ள கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரை யோரம் செங்கமேடு சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளரம் தெரியாத வாலிபர்கள் மாணவனை கத்தியால் குத்தினார்கள். பின்னர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தததாக கூறப்பட்டது.
இது தொடர்பாக முதலில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆனாலும் குற்றவாளிகள் குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மாணவனும, மாணவியும் நீதிபதியிடம் வாக்கு மூலம் அளிததனர். இருவரும் கூறியது உண்மையா என்பதை அறிய அவர்களிடம் உண்மை கண்ட றியும் சோதனை நடைபெற்றது. இது குறித்து போலீசார் கூறியதாவது சம்பவத்தன்று மாணவனும், மாணவியும் பேசிக் கொண்டி ருந்த போது அங்கு 2 பேர் வந்துள்ளனர். அதில் ஒருவர் மாணவியின் செல்போனை பறித்து சேதப்படுத்தி உள்ளார்.பின்னர் மாணவி அணிந்தி ருந்த வெள்ளி மோதிரம் மற்றும் ெகாலுசை பறித்துள்ளார். மற்றொருவர் மாணவரை கத்தியால் குத்தி உள்ளார். மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதற்கிடையே மருத்துவ பரிசோதனை அறிக்கையிலும் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே டி.என்.ஏ. மற்றும் மருத்துவ பரிசோதனை செய்து அதன் முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்