என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் 10.53 சதவீதம் அதிகரிப்பு
- உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
- புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளுக்கு ஆடை களை ஏற்றுமதி செய்து வர்த்தகம் நடக்கிறது.
ஆடை ஏற்றுமதி வர்த்தகம்
கடந்த காலங்களில் நூல் விலை உயர்வு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டதால் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அகில இந்தியளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.9 ஆயிரத்து 801 கோடிக்கு நடைபெற்றது. இது கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 22.7 சதவீதம் அதிகரிப்பு. திருப்பூரில் ஆயத்த ஆடை வர்த்தகம் மெல்ல மெல்ல ஆர்டர்கள் நடந்து வருகிறது.
11 ஆயிரத்து 52 கோடி வர்த்தகம்
இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.11 ஆயிரத்து 52 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் மாதம் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தம் ரூ.12 ஆயிரத்து 214 கோடிக்கு நடைபெற்றது.
இது கடந்த ஆண்டை விட 10.53 சதவீதம் அதிகரிப்பு. ஆயத்த ஆடை ஏற்றுமதி சதவீதம் அதிகரித்துள்ளதால், புதிய ஆர்டர்கள் அதிகரிக்கும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்து ள்ளனர்.