search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்ஸ்டாகிராமில் கஞ்சாவுடன் `ரீல்ஸ்: போலீசார் அதிரடி
    X

    இன்ஸ்டாகிராமில் கஞ்சாவுடன் `ரீல்ஸ்': போலீசார் அதிரடி

    • போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
    • கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை அதிரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முனுபு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ல் வாலிபர்கள் சிலர் கஞ்சா புகைப்பது போன்று வீடியோ வெளியானது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் விசாரித்த போது ரீல்ஸ் வெளியிட்டது அப்பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரிகளான தீபக், சந்துரு என்பது தெரிந்தது. அவர்களை பிடிக்க போலீசார் செல்போன் எண்ணை வைத்து கண்காணித்தனர்.

    இந்த நிலையில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள அடையாறு ஆற்றின் மதகு அருகே பதுங்கி இருந்த தீபக், சந்துரு ஆகிய 2 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோத சுமார் 30 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தனர். இதில் தீபக் , சந்துரு ஆகிய இருவருக்கும் கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    அவர்களை போலீசார் கைது செய்து குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு கை, காலில் மாவு கட்டு போடப்பட்டது. விசாரணையில் பள்ளிக்கரணை பகுதி முழுவதும் கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டி பறந்துள்ளது தெரிந்தது.

    மாணவர்கள், வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த மாதம் கஞ்சா விற்பனை தொடர்பாக எதிர்தரப்பினருடன் ஏற்பட்ட மோதலில் தீபக்கின் நண்பரான விக்னேஷ் படுகொலை செய்யப்பட்டார்.

    இதன் தொடர்ச்சியாக தீபக் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் அதே பகுதியில் உள்ள வீடுகளை அடித்து நொறுக்கிய சம்பவமும் நடந்து உள்ளது.

    கைது செய்யப்பட்ட சந்துரு கஞ்சா விற்பனையில் கைது செய்யப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்து உள்ளார். தற்போது கூட்டாளிகள் 2 பேரும் கஞ்சாவுடன் ரீல்ஸ் வீடியோவால் சிக்கிக்கொண்டனர்.

    அந்த வீடியோவில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைதான தீபக், சந்துருவிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×