என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சோத்துப்பாறை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது.
- தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சோத்துப்பாறை அணை. இதன்மூலம் பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், குள்ளப்புரம், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக சோத்துப்பாறை அணை அதன் முழுகொள்ளளவான 126.40 அடியை எட்டியது. அதனைதொடர்ந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனையடுத்து அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
இன்றுமுதல் அடுத்தவருடம் மார்ச் மாதம் 15-ந்தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதல் 45 நாட்களுக்கு 30 கனஅடிநீரும், அடுத்த 31 நாட்களுக்கு 27 கனஅடிநீரும், 60 நாட்களுக்கு 25 கனஅடிநீரும் என திறக்கப்பட உள்ளது.