search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்
    X

    திராளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்த காட்சி.

    சேலம் கோட்டை அழகிரி நாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

    • திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.
    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.

    சேலம்:

    சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருமணி முத்தாறு நதிக்கரையோரத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோட்டை அழகிரி நாதர் கோவில் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாகத்தினையொட்டி சேலம் மாநகரில் சிவன் தேர், பெருமாள் தேர் என அடுத்தடுத்த நாட்களில் தேர்த்திருவீதி உலா நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக தேர்வீதி உலா நடக்கவில்லை.

    இந்த ஆண்டிற்கான தேரோட்ட வைபவம் கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. கடந்த 30-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது.

    சிறப்பு அலங்காரங்கள்

    இதனை தொடர்ந்து, இன்று தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்க ளால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.பின்னர் மலர்களால் அலங்க ரிக்கப்பட்ட தேரில் அழகிரிநாத பெருமாள் எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா, கோபாலா என முழக்கமிட்டு தேரை இழுத்தனர்.

    போக்குவரத்து மாற்றம்

    சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த னர். தேரோட்டத்தையொட்டி தேர் செல்லும் சாலையில் மின்சார வயர்கள் அனைத்தும் அகற்றப் பட்டன. போக்குவரத்தி லும் மாற்றம் செய்யப்பட்டது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×