search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் ஊரக விளையாட்டு மைதான பணிகள் 99 சதவீதம் நிறைவு
    X

    அத்தனூர்பட்டி விளையாட்டு மைதானத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    சேலம் மாவட்டத்தில் ஊரக விளையாட்டு மைதான பணிகள் 99 சதவீதம் நிறைவு

    • ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 385 கிராம ஊராட்சி களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 385 ஊராட்சிகளில் 380 ஊராட்சிகளில் முழுமையாக பணிகள் முடிக்கப் பட்டுள்ளன.

    மேலும், மகுடஞ்சாவடி யில் 2 மைதானமும், ஏற்காடு, பனமரத்துப்பட்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் தலா ஒரு ஊரக விளையாட்டு மைதானமும் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஊரக விளையாட்டு மைதானப் பணிகள் 99 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வருவாய் துறை, பள்ளி கல்வித்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், விளையாட்டு சங்கங்கள் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், அத்தனூர்பட்டி ஊரக விளையாட்டு மைதானத்தினை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    ஊரக விளையாட்டு மைதானம் தரமுடன் நீண்ட நாட்களுக்கு இளைஞர்கள் பயன்படுத்தும் வகையில் ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, கொளத்தூர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, ஓமலூர், சேலம், சங்ககிரி, தலைவாசல், தாரமங்கலம், வாழப்பாடி, வீரபாண்டி மற்றும் ஏற்காடு வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களுக்கு ரூ. 4.66 கோடி மதிப்பீட்டில் பேவர் பிளாக் நடைமேடை, பேவர் பிளாக் நடைபாதை, பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஓமலூர் மற்றும் வீரபாண்டி வட்டாரங்களில் உள்ள ஊரக விளையாட்டு மைதானங்களில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் மைதானம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாணவ, மாணவியர் களுக்கு மன அழுத்தம் ஏற்படாத வகையில் அவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தினை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அதிகரிக்கச் செய்ய வேண்டும். வகுப்பறையில் விளையாட்டிற்கென ஒதுக்கப்படும் நேரத்தினை மற்ற பாடங்களுக்காக எடுத்துக்கொள்ளாமல் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பாக விளையாட அனுமதிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. விளையாட்டு போட்டிகள் மாணவ, மாணவியர்களிடையே மிகச் சிறந்த ஒழுக்கத்தை கற்றுத்தரும் என்பதாலும், காலை, மாலை இரு வேலையும் விளையாடு வதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, சேலம் வருவாய் கோட்டாட்சியர் அம்பாயிரநாதன், வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், அட்மா குழுத் தலைவர் சக்கரவர்த்தி மற்றும் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் உள்ளிட்ட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×