search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடிபாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்
    X

    போலி கூட்டுறவு சங்கம் நடத்தி ரூ.58 கோடி மோசடிபாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம்

    • அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற நிறுவனம் சேலம் பேர்லேண்ட்ஸ் கணேஷ் டவர்ஸ், என்ற முகவரியில் தலைமையிட மாக கொண்டு இயங்கி வந்தது.
    • மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணையில் இதுவரை பாதிக்கப்பட்ட 1095 முதலீட்டாளர்களி டமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    போலி கூட்டுறவு சங்கம்

    அமுதசுரபி சிக்கனம் மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற நிறுவனம் சேலம் பேர்லேண்ட்ஸ் கணேஷ் டவர்ஸ், என்ற முகவரியில் தலைமையிட மாக கொண்டு இயங்கி வந்தது. இந்தநிறுவனம் பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி தி்ட்டங் களை கூறி ஆசையை தூண்டி பல திட்டங்களில் முதலீடு பெற்றதாகவும், அதில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாக கொடுத்த புகாரின் பேரில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், அந்த நிறுவனத்தின் தலைவர் ஜெயவேல், ஸ்தாபகர் தங்கபழம், பொதுமேலாளர் பிரேம் ஆனந்த், இயக்குனர் சரண்யா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    புகார்கள்

    மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணையில் இதுவரை பாதிக்கப்பட்ட 1095 முதலீட்டாளர்களி டமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    சென்னை பொருளாதார குற்றப்பிரிவு

    மேலும் மீதமுள்ள பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் வருகின்ற 22-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு, மேற்கு மண்டலம், காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் புகார்கள் பெறப்பட உள்ளதால், இதுவரை சேலம் பெருளா தார குற்றப்பிரிவில் புகார் கொடுக்காத பாதிக்கப் பட்ட முதலீட்டா ளர்கள் சேலம் மாநகரம், காவல் ஆணையர் அலுவலகம் அருகிலுள்ள, லைன் மேடு, காவலர் சமுதாய கூட்டத்தில் புகார் மனுக்களை நேரில் வந்து கொடுக்குமாறு அறி விக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×