search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் போலீசார் போல நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது
    X

    கைதானவர்களை படத்தில் காணலாம். 

    சேலத்தில் போலீசார் போல நடித்து வியாபாரியிடம் பணம் பறித்த வழக்கில் இதுவரை 16 பேர் கைது

    • வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார்.
    • கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெங்கடாஜல கவுண்டர் அவென்யூைவ சேர்ந்தவர் வெங்கடேஷ் (37), செங்காந்தாள் வியாபாரம் செய்து வந்தார். கண்ணு வலி கிழங்கு கொள்முதல் செய்ய 50 லட்சம் ரூபாயை எடுத்து கொண்டு நண்பர்களுடன் சேலம் இரும்பாலை அருகே வந்தார்.

    ரூ. 50 லட்சம் பறிப்பு

    அப்போது 2 கார்களில் வந்த கும்பல் போலீஸ் போல நடித்து வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்களை கடத்தி சென்று பணத்தை பறித்து கொண்டு தப்பினர். வெங்கடேஷ் புகார் படி இரும்பாலை போலீசார் விசாரணை நடத்தி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் 6 பேரை கைது செய்தனர்.

    மேலும் இதில் தொடர்பு டையவர்களை கைது செய்ய துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்தனர். இதை ெதாடர்ந்து கடந்த 20-ந் தேதி மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராேகஷ் (33), நரேஷ்குமார் (37), சுரேஷ்குமார் (34) ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். காட்பாடி அருகே உள்ள முள்ளிபாளையத்தை சேர்ந்த வேலு (42) என்பவரை நேற்று கைது செய்தனர்.

    ரூ.30 லட்சம் மீட்பு

    இவர்களிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு காரும் பறிமுதல் செய்யப்பட்டது . கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் இதில் யாருக்காவது தொடர்பு உண்டா ? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான வர்களை காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் இந்த வழக்கு தொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×