search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரி
    X

    சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் இன்று சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அருகில் கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்.

    முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரி

    • காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலு வலரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருமான சங்கர் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார்.

    காலை உணவு திட்டம்

    தொடர்ந்து இன்று காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனர மைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் மேற்கொள்ளப் பட்டுள்ள புனரமைப்பு பணிகள் மற்றும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆரம்ப சுகாதார நிலையம்

    தொடர்ந்து சேலம் பொன்னம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்து நோயா ளிகளி டம் கேட்டறிந்தார். அப்போது மருந்து மாத்திரை இருப்பு குறித்தும் கேட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும் இன்று பிற்பகல் வட கிழக்கு பருவ மழையை யொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி கள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

    ரூ.19 கோடி மதிப்பு

    இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:-

    கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது குறித்த நேரத்தில் சத்தான உணவுகளை, சுகாதார மான முறையில் சமைத்து வழங்கி வரும் சமைய லர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையத்தி னையும், அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனர மைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகளை யும், அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நோயாளி களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் போடிநாயக்கன் பட்டி ஏரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி களும் ஆய்வு செய்யப் பட்டது. சேலம் மாநக ராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவா திஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×