என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சங்கரன்கோவில் அருகே வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா
ByTNLGanesh25 Sept 2023 2:35 PM IST
- ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தி மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
- பேரணியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள ராமநாதபுரம் பஞ்சாயத்து வளாகத்தில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு நெல்லை வன கோட்ட தமிழ்நாடு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வனச்சரக அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் வனச்சரக அலுவலர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு உரையாற்றினார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பேரணியை தென்காசி எம்.பி. தனுஷ் குமார், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரி முத்து, ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், துணைத்தலைவர் சங்கரலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் வனவர் பிரவீன் நன்றி கூறினார்.
Next Story
×