search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம்
    X

    மயிலம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

    மயிலம் ஒன்றியத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம்

    • பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமலிருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    விழுப்புரம்:

    மயிலம் ஒன்றியத்தில் மயிலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளான கோயில் அடிவாரம், பிள்ளையார் கோயில் தெரு மற்றும் மயிலாடும் பாறை ஆகிய பகுதிகளில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு விழிப்புணர்வு முகாம் வட்டாரக் கல்வி அலுவலர் மதன்குமார், தலைமையில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் குழு மூலம் நடைபெற்றது. பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு கள ஆய்வின்போது அப்பகுதியில் உள்ள பெற்றோர்களிடையே தங்களது குழந்தைகளை இடையில் நிறுத்தாமல் குழந்தைகளை பள்ளிக்கு தொடர்ச்சியாக அனுப்பிவைக்க வலியுறுத்தி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் மயிலம் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் லட்சுமி நரசிம்மன், செந்தில் ராஜா, ஆனந்தி, சுப்பிரமணியன், ஸ்ரீதர், சிவக்குமார், மயிலம் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பாஸ்கரன் , சிறப்புப் பயிற்றுநர் நந்தீஷ்வரி மற்றும் மயிலம் அங்கன்வாடி பணியாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

    Next Story
    ×