search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பென்னாகரத்தில் நிழற்கூடம் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் தவிப்பு
    X

    மழையில் நனைந்தபடி பேருந்திற்கு காத்திருக்கும் பள்ளி மாணவிகளை படத்தில் காணலாம்.

    பென்னாகரத்தில் நிழற்கூடம் இல்லாததால் பள்ளி மாணவ, மாணவிகள் தவிப்பு

    • மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.
    • மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த பேருந்து நிலையத்தை அகற்றப்பட்டு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டு தற்போது ரூ. 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தற்காலிக பேருந்து நிலையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வருகிறது. அங்கு காலை, மாலை நேரங்களில் அதிக அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஒகேனக்கல் செல்லும் சுற்றுலா பயணிகள் என சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

    இந்த புதிய பேருந்து நிலையத்தில் கடும் வெயில் காலமாக இருந்தாலும், மழைகாலமாக இருந்தாலும் வயதானோர், குழந்தைகள், தாய்மார்கள் உள்ளிட்டோர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் அவதிபடுகின்றனர்.

    தற்போது மழை காலம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

    இதனால் சின்னப்பநல்லூர், கூத்தப்பாடி, முதுகம்பட்டி, நாகனூர், ஒகேனக்கல் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு செல்லும் மாணவிகள் பள்ளியின் எதிரே உள்ள புளியமரத்தடியில் மழையில் நனைத்தபடியே பஸ்சிற்கு காத்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மேலும் பள்ளியிலிருந்து புதிய பேருந்து நிலையம் வர சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மழையில் நனைந்தபடி நடந்தே வர வேண்டும்.

    பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தால் ஒதுங்கி நிற்க கூட இடம் இல்லை.

    இதனால் அப்பகுதியில் தற்காலிக நிழற்கூடம் அமைக்க தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×