என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வரி கட்டாத கடைகளுக்கு சீல்
- சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.
- வீடு மற்றும் கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
தருமபுரி,
தருமபுரி நகராட்சி எல்லைக்குட்பட்ட வீடு மற்றும் வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, கடை வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் மற்றும் தொழில் வரி ஆகியவை உடனடியாக செலுத்தப்பட வேண்டும்.
அதிக வரி பாக்கி உள்ள வீடு மற்றும் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் அதிக வரி பாக்கி வைத்துள்ள ஆறுமுகாச்சாரி தெரு மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள வீடு மற்றும் கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
பொதுமக்கள் அனைவரும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உடன் செலுத்துமாறும், வரி செலுத்தாத வீடு மற்றும் வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.