search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக். பள்ளி மாணவன் கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தில் சாதனை
    X

    தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவன் ஸ்வஸ்திக், திருநெல்வேலி ரேஷிகா.

    எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக். பள்ளி மாணவன் கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் தேசிய அளவில் முதலிடத்தில் சாதனை

    • எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றனர்.
    • தங்க பதக்கமும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பையினை அளித்து பாராட்டி கவுரவபடுத்தினர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் கலப்பு இரட்டையர் பேட்மிட்டன் பிரிவு போட்டியில் தேசிய அளவில் முதல் பரிசு பெற்று சாதனை புரிந்துள்ளார்.

    பேட்மிண்டன் அசோஷியயேசன் ஆஃப் இந்தியா நடத்திய தேசிய அளவிலான 17 வயதுக்கு உட்பட்டோர் பங்கு கொள்ளும் யோன்க்ஸ்ஆல் இந்திய போட்டி ஹைதராபாத் ஜவாலா குட்டா அகாடமியில் நடைபெற்றது.

    இதில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான பேட்மிண்டன் வீரர்கள் கலந்து கொண்டணர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 12 சுற்றுகளாக போட்டி நடைபெற்றன.

    அக்டோபர் 11 முதல் - அக்டோபர் 18ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டியில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவன் ஸ்வஸ்திக் கலப்பு இரட்டையர் பிரிவில் திருநெல்வேலி சேர்ந்த ரேஷிகா ஆகிய இருவரும் இணைந்து இறுதி போட்டியில் 17-21,23-21,21-12என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் பரிசினை பெற்று சாதனை புரிந்தனர்.

    பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதில் முன்னாள் இந்திய விராங்கனை ஜூவாலா குட்டா மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இருவரும் விரர்களை பாராட்டி அவர்களுக்கு தங்க பதக்கமும் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பரிசு, சான்றிதழ் மற்றும் கோப்பையினை அளித்து பாராட்டி கவுரவபடுத்தினர்.

    மத்திய மாநில விளையாட்டு துறை நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    எஸ்.இ.டி பள்ளி நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜ், தாளாளர் சித்ரா கோவிந்தராஜ் மற்றும் ஆசிரியர்கள், மாணவ - மாணவிகள் மாணவன் ஸ்வஸ்திக்கை மேலும் உலக அளவில் நடைபெறக் கூடிய போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவிற்காக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்க்க வாழ்த்தினர்.

    இதற்கு பக்கபலமாக இருந்த ராக்ஸ் அகடாமியின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா கிருஷ்ணமுர்த்தி மற்றும் இந்திய பேட்மிண்டன் பயிற்ச்சியாளர் மகேந்திரன் அவர்களையும் எஸ்.இ.டி பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    Next Story
    ×