search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை உக்கடத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் தொடர் பெட்ரோல் திருட்டு
    X

    கோவை உக்கடத்தில் சாலையோரம் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்களில் தொடர் பெட்ரோல் திருட்டு

    • ெபாதுமக்கள் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும் என்றனர்.
    • இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

    குனியமுத்தூர்.

    கோவை சுந்தராபுரத்தை 32 வயது வாலிபர். இவர் நேற்று பொள்ளாச்சி செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள உக்கடம் போலீஸ் நிலையம் காம்பவுண்ட் சுவரின் அருகே வாகனத்தை நிறுத்தி விட்டு பொள்ளாச்சி சென்றார்.

    அங்கு தனது வேலைகளை முடித்து விட்டு மீண்டும் உக்கடம் வந்து, மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றார். பின்னர் வாகனத்தை எடுத்து இயக்க முயற்சித்த போது அவரால் முடியவில்லை.

    இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை பார்த்தார். அப்போது பெட்ரோல் டேங்க் திறந்து கிடந்தது. உள்ளே பார்த்த போது பெட்ரோல் சுத்தமாக இல்லை. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால் காலையில் தான் அவர் 3 லிட்டர் பெட்ரோல் நிரப்பி கொண்டு வந்துள்ளார்.

    ஆனால் முற்றிலும் பெட்ரோல் இல்லாமல் துடைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதனால் யாரோ பெட்ரோலை திருடி இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் சிறிது தூரம் மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு மீண்டும் சென்றார்.

    கோவையில் அண்மை காலங்களாக மோட்டார் சைக்கிள் உள்பட பல வாகனங்களிலும் பெட்ரோல் திருடப்படுவது அதிகரித்துள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கூறியதாவது:-

    உக்கடம் பஸ் நிலையத்தையொட்டிய பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து டவுன்ஹால் வரை கடைகள் அடர்த்தியாக நெருக்கமாக இருக்கும். கடைகளுக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் கூட அந்த இடத்தில் நின்று விட்டு பேசிக் கொண்டிருப்பார்கள்.

    அப்படி இருந்தும் இப்பகுதியில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களில் தொடர் பெட்ரோல் திருட்டு நடப்பது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

    சிலர் வெளியில் சொல்கிறார்கள். பலர் அதனை வெளியே சொல்ல முடியாமல் மவுனமாக சென்று விடுகின்றனர். பெரிய திருட்டு நடந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கலாம். ஆனால் இந்த பெட்ரோல் விஷயத்துக்காக புகார் கொடுப்பதா என்று பலரும் ஏமாற்றத்துடன் இருசக்கர வாகனத்தை உருட்டிக் கொண்டு செல்வதை காண முடிகிறது.

    எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். மேலும் உக்கடம் முதல் டவுன்ஹால் வரை சி.சி.டி.வி காமிரா அமைக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு விழிப்புணர்வுடன் செயல்பட்டால் பெட்ரோல் திருட்டு தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    Next Story
    ×