search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொள்ளாச்சியில் 27-ந் தேதி கடை அடைப்பு- ஆர்ப்பாட்டம்
    X

    பொள்ளாச்சியில் 27-ந் தேதி கடை அடைப்பு- ஆர்ப்பாட்டம்

    • ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
    • அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

    பொள்ளாச்சி :

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் பொள்ளாச்சியில் வருகிற 27-ந்தேதி காலை 10 மணிக்கு பல்லடம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக திருமூர்த்தி பாசன விவசாயிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

    மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையில் நீர் பாது காப்பு கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம், தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபால கிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம். மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டனர்.

    கூட்ட முடிவில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் நீர் பாதுகாப்பு கூட்டமைப்பினர் கூறியதாவது:

    பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காம லும், ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாயத்திற் கும் போதுமான தண்ணீர் கிடைக்காததால் தரிசு நிலங்க ளாக உள்ளன. இந்த நிலையில் ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது ஏற்று கொள்ள முடியாது.

    இந்த திட்டத்தால ்கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. எனவே வருகிற 27-ந் தேதி நடைபெறும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அன்று மதியம் 1 மணி வரை கடைகளை அடைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒட் டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவி டும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிடக் கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் பி.ஏ.பி. விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

    Next Story
    ×