search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரியில்   வாடிக்கையாளர்களின் வாகனங்கள் காணாமல் போனால் கடை உரிமையாளர்களே பொறுப்பு
    X

    தருமபுரியில் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் காணாமல் போனால் கடை உரிமையாளர்களே பொறுப்பு

    • தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்க சாமி தலைமையில் நடந்தது.
    • வணிகர்களுக்கு போலீசார் அறிவுறுத்தல்

    தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஜவுளி கடைகளில் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பொது மக்கள் அணிந்து வரும் நகைகள் காணாமல் போ னால் கடை உரிமையா ளர்களே பொறுப்பு ஏற்க வேண்டும் என தருமபுரி போலீஸ் நிலையத்தில் நடை பெற்ற ஜவுளி கடை உரிமையாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தெரிவித்தார்.

    தருமபுரி நகர போலிஸ் ஸ்டேசனில் ஜவுளி கடை உரிமையாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் தருமபுரி டவுன் இன்ஸ்பெக்டர் ரங்க சாமி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து ஜவுளி கடைகளிலும் முன்பு றம் சிசிடிவி கேமரா பொருத்தவேண்டும், பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்கிறதா என சோ தனை செய்ய வேண்டும்.

    கடைகளின் முன்பு நிறுத்தப்படும் வாகனங்க ளுக்கு தனியாக செக்யூரிட்டி நியமித்துக்கொள்ள வேண்டும். ஜவுளி கடைகள் முன்பு டூ வீலர்கள் திருடு போனால் கடை உரிமையா ளர்களே பொறுப்பேற்க வேண்டும்.

    ஜவுளி கடையின் உள்புறமோ வெளிப்புறமோ தங்க நகைகள் காணாமல் போனால் கடை உரிமையா ளர்களே பொறுப்பேற்க வேண்டும், சாலையில் விளம்பர பேனர்களை வைக்க கூடாது, போக்கு வரத்திற்க்கும் பொது மக்களுக்கும் இடையூறு ஏற்ப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார்.

    Next Story
    ×