search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை
    X

    விழாவில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பழங்கள் வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகரசபை தலைவர் முத்துதுரை உள்ளனர்.

    8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை

    • சிவகங்கை மாவட்டத்தில் 8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம ரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள், 16 தனியார்மருத்துவமனைகள் அங்கீகாீக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 553 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர்குடும்ப அட்டை, ஆதார்அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி களுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×