search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகம்
    X

    புதிய கால்நடை மருந்தகத்தை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் பலர் உள்ளனர்.

    ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகம்

    • ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்ட கால்நடை மருந்தகத்தை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் 79 கால்நடை மருந்தகங்களும், 47 கிளை கால்நடை மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    ஆலங்குடி, தேவகோட்டை, பனங்குடி, பி.நெற்புகப்பட்டி, நடராஜ புரம் மற்றும் செம்பனூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில், ஆலங்குடி ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய கால்நடை மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு புதிய மருந்தகத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் 20 பயனாளி களுக்கு செறிவூட்டப்பட்ட தாதுஉப்பு கலவை மற்றும் 20 பயனாளிகளுக்கு நீண்ட கால பயன்பாட்டிற்கு நறுக்கிய பசுந்தீவன 40 கிலோ எடை கொண்ட புல் மூட்டைகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் நாக நாதன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர்கள் சொர்ணம் அசோகன் (கல்லல்), சண்முகவடிவேலு (திருப்பத்தூர்), மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் செந்தில்குமார், உதவி இயக்குநர் பாலசுப்பி ரமணியன், பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளா; ரமணன், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அழகுமீனாள், இளங்கோ வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×