search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை
    X

    சிவகங்கை யூனியன் மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா ஆய்வு செய்து தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அருகில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி உள்ளார்.

    பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை

    • பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
    • வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகா ப்புத்துறை ஆணையர் லால்வேனா, அனைத்து துறை முதல்நிலை அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட த்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட ங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை அனைத்துப்ப குதிகளிலும் மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்ப ணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதிநிலை தொடர்பாக அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கை யாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவே ற்றுவதற்கான நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×