search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்
    X

    அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர்

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
    • உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.

    சிங்கம்புணரி

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்கா மல் உயிர்ப்பதிவேட்டில் காத்திருக்கும் இளைஞர்க ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    முறையாக பள்ளியில் பயின்று 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பில் தோல்வியுற்ற வர்களுக்கு மாதம் ரூ.200ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு (பி.இ. போன்ற தொழில்சார் பட்டப்படிப்பு தவிர) மாதம் ரூ.60டி வீதம் 3 ஆண்டுக ளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    இத்தொகை நேரடியாக மனுதார்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கொரு முறை வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும்.

    தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனை யோர் 40 வயதுக்கு மிகா மலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம் மிகாமல் இருத்தல் வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.

    தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித்தொகை பெற நாளது தேதி வரை வங்கி களில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைத்து தொடர்ந்து உதவித்தொகை பெற்றுகொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. சுயஉறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனா ளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

    விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களி லும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் உதவித்தொகை பெறு பவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்து ரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×