search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
    X

    புரவி எடுப்பு ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள்.

    அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

    • அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
    • புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடந்தது.

    இதையொட்டி மானாமதுரை வைகைஆற்று கரையில் குதிரை பொம்மைகள், சுவாமி சிலைகள் மற்றும் பல்வேறு தெய்வங்கள் உள்ளிட்ட பொம்மைகளும் செய்து வைக்கப்பட்டிருந்தன. விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் புரவி எடுப்பதற்காக கிராமத்தில் இருந்து ஊர்வலமாக மானாமதுரைக்கு வந்தனர். தயார் நிலையில் இருந்த புரவிகளுக்கும், பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து மழை ேவண்டி வழிபாடு செய்தனர்.

    அதைத் தொடர்ந்து புரவி எடுப்பு நிகழ்வு தொடங்கியது. ஆண்கள் புரவிகளை தோளில் சுமந்தும், பெண்கள் பொம்மைகளை தலையில் சுமந்தும் விளாக்குளம் கிராமத்திற்கு ஊர்வலமாக புறப்பட்டனர். மேள தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தொடங்கிய புரவி எடுப்பு ஊர்வலம் மானாமதுரை நகரின் வீதிகளில் வலம் வந்து அதன் பின்னர் விளாக்குளம் கிராமத்திற்கு சென்றடைந்தது.

    அங்குள்ள நிறைகுளத்து அய்யனார் கோவிலில் புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும், அய்யனார் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. புரவி எடுப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் மற்றும் மானாமதுரை விளாக்குளத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×